மாமனிதன் பற்றி இயக்குனர் ஷங்கர் வெளியிட்ட தகவல்
ADDED : 1298 days ago
சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள மாமனிதன் படம் இன்று(ஜூன் 24) திரைக்கு வந்துள்ளது. இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இணைந்து இப்படத்துக்கு இசையமைத்திருக்கிறார். இந்த நிலையில் மாமனிதன் படம் குறித்து சமூக வலைதளத்தில் இயக்குனர் ஷங்கர் ஒரு பதிவு போட்டு உள்ளார். அதில், ‛‛ஒரு நல்ல படத்தை பார்த்த திருப்தியை இந்த மாமனிதன் படம் கொடுத்திருக்கிறது. இயக்குனர் சீனு ராமசாமி தனது இதயத்தையும் ஆன்மாவையும் வைத்து எதார்த்தமான ஒரு படத்தை கொடுத்திருக்கிறார். விஜய்சேதுபதியின் அற்புதமான நடிப்பு தேசிய விருதுக்கு தகுதியானது. இளையராஜா- யுவன் சங்கர் ராஜாவின் இசை படத்தின் கதையோடு ஆத்மார்த்தமாக இணைந்திருக்கிறது'' என்கிறார் ஷங்கர்.