துபாய் அமைச்சருடன் கமல் : வைரலாகும் புகைப்படம்
ADDED : 1194 days ago
கமல்ஹாசன் நடிப்பில் சமீபத்தில் 'விக்ரம்' திரைப்படம் வெளியானது. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார். இப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. வெளியாகி மூன்று வாரங்களான நிலையில் இந்த படம் திரையரங்குகளில் வெற்றிக்கரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. 25 நாட்களை கடந்துள்ள இந்த படம் ரூ.400 கோடி வசூலை நெருங்கி வருகிறது. இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரகம் அமைச்சர் முபாரக் அல் நய்னனை, நடிகர் கமலஹாசன் சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது .