நடிகராக அறிமுகமாகும் காமெடி நடிகர் செந்திலின் மகன்
ADDED : 1242 days ago
தமிழ் சினிமாவின் பிரபல காமெடி நடிகர் செந்திலின் மகன் மணிகண்ட பிரபு தற்போது சினிமாவில் நடிகராக அறிமுகமாகி உள்ளார். அறிமுக இயக்குனர் என்.எ.ராகேஷ் இயக்கத்தில் பாபி சிம்ஹா நடித்து வரும் படம் தடை உடை. இந்த படத்தில் பாபி சிம்ஹாவுக்கு ஜோடியாக மிஷா நராங் நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரங்களில் பிரபு, செந்தில், ரோகிணி, சரத் ரவி, தீபக் பரமேஷ் ஆகியோர் நடிக்கின்றனர். இப்படத்திற்கு ஆதிப் இசையமைக்கிறார். தற்போது இந்த படத்தில் செந்திலின் மகன் மணிகண்ட பிரபு நடிகராக இணைந்துள்ளார். பாபி சிம்ஹா அவரை வரவேற்று சில புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.