கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் தம்பியுடன் இணைந்து நடிக்கும் ராகவா லாரன்ஸ்
ADDED : 1194 days ago
இயக்குனர் கே.எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார் . இந்தப் படத்தில் ராகவா லாரன்ஸின் தம்பி எல்வின் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். ஆக்ஷன் மற்றும் காமெடி படமாக உருவாக இருக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று(ஜூன் 25) துவங்கியது. பூஜையில் ராகவா லாரன்ஸ், அவரது தம்பி எல்வின், இயக்குனர் கேஎஸ் ரவிக்குமார் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டுள்ளனர். இந்தப் படத்தின் இதர நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது லாரன்ஸ் சந்திரமுகி 2, அதிகாரம் மற்றும் ருத்ரன் ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார். இவற்றி ருத்ரன் படம் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. இந்தாண்டு கிறிஸ்துமஸ் தினத்தில் வெளியாக உள்ளது.