உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / இரண்டாவது முறையாக கோவிட் பாதிப்பில் பாலகிருஷ்ணா

இரண்டாவது முறையாக கோவிட் பாதிப்பில் பாலகிருஷ்ணா

கொரோனாவின் இரண்டு அலைகளும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி விட்டு மறைந்த நிலையில், இந்த வருடம் துவக்கத்திலிருந்து மிகப்பெரிய பாதிப்பு எதுவும் இல்லாமல் இருந்தது. ஆனால் கடந்த சில வாரங்களாக கொரோனா தாக்கம் அதிகரித்து வருவதாக தெரிகிறது. இதன் பாதிப்பிற்கு சில திரையுலக பிரபலங்களும் ஆளாகியுள்ளனர். அந்தவகையில் தெலுங்கு சினிமாவின் சீனியர் நடிகரான பாலகிருஷ்ணா தற்போது கொரோனா தொற்றுக்கு ஆளாகியிருக்கிறார்.

கடந்த வருடம் தான் கொரோனா தொற்றால் முதல்முறையாக பாதிக்கப்பட்ட பாலகிருஷ்ணா அதிலிருந்து மீண்டு வந்தார். தற்போது அவருக்கு எந்தவித அறிகுறிகளும் இல்லாமல் இரண்டாவது முறையாக' கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக அவரது தரப்பில் இருந்து அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. மேலும் கடந்த இரண்டு நாட்களாக தன்னுடன் தொடர்பில் இருந்தவர்களை கோவிட் பரிசோதனை செய்து கொள்ளுமாறு பாலகிருஷ்ணா கேட்டுக்கொண்டு உள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ரசிகர்களும் தெலுங்கு திரையுலக பிரபலங்களும் பாலகிருஷ்ணா விரைவில் குணமடைய தங்களது பிரார்த்தனைகளை தெரிவித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !