'அம்மா' ஆகப் போகும் ஆலியா பட்
ADDED : 1200 days ago
ஹிந்தித் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவர் ஆலியா பட். அவருக்கும் நடிகர் ரன்பீர் கபூருக்கும் கடந்த ஏப்ரல் மாதம் 14ம் தேதி மும்பையில் திருமணம் நடைபெற்றது. திருமணமான இரண்டு மாதங்களில் ஆலியா பட் கர்ப்பமடைந்துள்ளார். அது குறித்து இன்ஸ்டா தளத்தில் “எங்களது பேபி…விரைவில்…” எனப் பதிவிட்டுள்ளார்.
மருத்துவமனையில் ஸ்கேன் செய்யும் போட்டோவைப் பகிர்ந்து இதை அவர் தெரியப்படுத்தியுள்ளார். ஆலியா அம்மா ஆகப் போவது குறித்து பகிர்ந்ததும் அதை இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர்.
நடிகைகள் ரகுல் ப்ரீத், ராஷி கண்ணா உள்ளிட்ட சினிமா பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்துள்ளார்கள். ஆலியா பட், அவரது கணவர் ரன்பீர் கபூர் நடித்துள்ள 'பிரம்மாஸ்திரா' படம் செப்டம்பர 9ம் தேதி ஹிந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகப் போகிறது.