கர்நாடகம் சினிமாவை கடவுளாக கொண்டாடுகிறது: கிச்சா சுதீப்
ஷாலினி ஆர்ட்ஸ் சார்பில் ஜாக் மஞ்சுநாத் தயாரிப்பில் உருவாகி உள்ள படம் விக்ராந்த் ரோணா. அனுப் பண்டாரி இயக்கி உள்ளார். கிச்சா சுதீப், ஜாக்குலின் பெர்னாண்டஸ், நிரூப் பண்டாரி மற்றும் நீதா அசோக் நடித்துள்ளனர். 3டி தொழில்நுட்பத்தில் உருவாகி உள்ள இப்படம் ஜுலை 28ம் தேதி உலகம் முழுவதும் கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும் ஆங்கிலம் மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகிறது.
படத்தின் அறிமுக நிகழ்ச்சி சென்னையில் நடந்தது இதில் கலந்து கொண்டு கிச்சா சுதீப் பேசியதாவது: நான் சினிமாவை நம்புகிறேன், சினிமாவை தான் காதலிக்கிறேன். அதுதான் எங்களை இங்கு வரை அழைத்து வந்துள்ளது. இது ஒரு நல்ல படைப்பு, இந்தப்படத்தில் நானும் இருப்பது எனக்கு பெருமையாக உள்ளது. தமிழில் நல்ல வாய்ப்புகள் வரும்போது, அழைக்கும்போது நடிப்பேன். கர்நாடகா சினிமாவை கடவுளாக கொண்டாடும் இடம், கேஜிஎப் மூலம் அது எல்லா இடத்திலும் தெரிவது மகிழ்ச்சி. இந்தப்படம் அனைவரையும் புது உலகிற்கு கூட்டிச் செல்லும். என்றார்.