பாயும் ஒளி நீ எனக்கு டீசர் வெளியீடு
ADDED : 1309 days ago
டாணாக்காரன் படத்தை அடுத்து விக்ரம் பிரபு நடித்துள்ள படம் பாயும் ஒளி நீ எனக்கு. கார்த்திக் அத்வைத் என்பவர் இயக்கியுள்ள இந்த படத்தில் விக்ரம் பிரபுவுடன் வாணி போஜன், விவேக் பிரசன்னா உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். ஆக் ஷன் கதையில் உருவாகியுள்ள இந்த படத்தின் டீசர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. ஒரு நிமிடம் ஓடக்கூடிய இந்த டீசரை நடிகர் கார்த்தி வெளியிட்டார். டீசர் முழுக்க வெறும் ஆக் ஷன் காட்சிகள் மட்டுமே இடம் பெற்றுள்ளன.