உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 2.50 லட்ச ரூபாய் சைக்கிளில் ஆர்யா சைக்கிள் பயிற்சி

2.50 லட்ச ரூபாய் சைக்கிளில் ஆர்யா சைக்கிள் பயிற்சி

சினிமா நடிகர்கள் பலரும் தங்களது உடலை கட்டுக் கோப்பாக வைத்துக் கொள்வார்கள். பலருக்கு ஜிம்மில் உடற்பயிற்சி செய்வதுதான் பிடிக்கும். ஆனால், ஜாமி என அழைக்கப்படும் நடிகர் ஆர்யாவுக்கு சைக்கிள் பயிற்சிதான் மிகவும் பிடித்தமான ஒன்று.

சைக்கிள் பயிற்சி மேற்கொள்பவர்கள் விலை உயர்ந்த சைக்கிள்களையே தங்களது பயிற்சிக்கு பயன்படுத்துவார்கள். ஆர்யா தற்போது புதிதாக 'ஜயன்ட் டெபி' என்ற சைக்கிளை வாங்கி அதில் சைக்கிள் பயிற்சி மேற்கொண்டுள்ளார்.

தன்னுடைய புதிய சைக்கிளில் இன்று முதல் முறையாக 50 கிமீ பயணம் செய்தது குறித்து பதிவிட்டுள்ளார். ஆர்யா புதிதாக வாங்கியுள்ள அந்த சைக்கிளின் விலை 2 லட்சத்து 59 ஆயிரம் ரூபாய் மட்டுமே.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !