ராம்சரண் நடிக்கும் படத்திற்கு அஜித் பட டைட்டில்
ADDED : 1197 days ago
தெலுங்கு நடிகர் ராம் சரணை வைத்து அவரது 15வது படத்தை இயக்கி வருகிறார் இயக்குனர் ஷங்கர். இப்படத்தில் பாலிவுட் நடிகை கியாரா அத்வானி, அஞ்சலி, ஜெயராம் உள்பட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் தயாராகி வரும் இந்தப் படத்திற்கு தமன் இசையமைக்கிறார். இந்த படத்திற்கு ஆர்சி 15 என தற்காலிகமாக டைட்டில் வைத்து படமாக்கி வரும் ஷங்கர் தற்போது சிட்டிசன் என்ற தலைப்பு வைப்பதற்கு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது. இதே பெயரில் கடந்த 2001ம் ஆண்டு தமிழில் சரவண சுப்பையா இயக்கத்தில் அஜித் நடிப்பில் படம் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.