இசையமைப்பாளராக அறிமுகமாகும் இயக்குனர் மிஷ்கின்
ADDED : 1296 days ago
அஞ்சாதே, யுத்தம் செய், முகமூடி, பிசாசு, துப்பறிவாளன் என பல படங்களை இயக்கியவர் மிஷ்கின். தற்போது பிசாசு -2 என்ற படத்தை இயக்கி இருக்கிறார். அதோடு பல படங்களில் நடித்துள்ள மிஷ்கின் பல படங்களில் பாடல் எழுதியிருக்கிறார். இந்நிலையில் சவரக்கத்தி படத்தை இயக்கிய ஆதித்யா இயக்கத்தில் உருவாகி வரும் டெவில் என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடிப்பதோடு இப்படத்தின் இசையமைப்பாளராகவும் அறிமுகமாகிறார் மிஷ்கின். இந்த படத்திற்காக மிஷ்கின் கம்போஸ் செய்துள்ள 4 பாடல்கள் விரைவில் வெளியிடப்பட உள்ளன. மேலும் இந்த படத்தில் விதார்த், பூர்ணா ஆதித் அருண் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.