திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த பிரசன்னா - சினேகா
ADDED : 1295 days ago
சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட நடிகை நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவன் ஆகிய இருவரும் திருமணம் முடிந்த அடுத்த நாளே திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்கள். இந்த நிலையில் அவர்களைத்தொடர்ந்து தற்போது நடிகர் பிரசன்னா, நடிகை சினேகா நட்சத்திர தம்பதியரும் திருப்பதியில் சாமி தரிசனம் செய்திருக்கிறார்கள். அப்போது தரிசனம் முடித்து விட்டு வெளியே வந்த அவர்களுடன் ரசிகர்கள் செல்பி எடுத்துள்ளார்கள். இதுகுறித்த வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.