உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / திவ்யா: இன்வெஷ்டிகேஷன் த்ரில்லர்

திவ்யா: இன்வெஷ்டிகேஷன் த்ரில்லர்

நியான் ஸீ பிலிம்ஸ் ஸ்ரீஜேஷ் வல்சன் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் சனீஷ் சுகுமாரன் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் திவ்யா. சாஸ்வி பாலா, மிதுன், சம்பத் ராம், மேத்யூ வர்க்கீஸ், பிரவின், அகில் கிருஷ்ணஜித் முருகன் ஆகியோர் நடித்துள்ளனர். விபின் ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார், ரெஜிமோன் இசை அமைத்துள்ளார்

படம் பற்றி இயக்குனர் சனீஷ் சுகுமாரன் கூறியதாவது: தமிழில் இன்வெஷ்டிகேஷன் த்ரில்லர் படங்கள் நிறைய எண்ணிக்கையில் வருவதில்லை. இன்வெஷ்டிகேட்டிவ் த்ரில்லர் வகைப்படங்கள், தொடக்கம் முதல் இறுதி வரை நம்மை பரபரப்பாகவே வைத்திருக்கும். அப்படி ஆரம்பம் முதல் கடைசி வரை படம் பார்ப்பவர்களை பரபரப்பாக வைத்திருக்கும் இன்வெஷ்டிகேட்டிவ் த்ரில்லர் தான் திவ்யா.

புதுப்புது இடங்களுக்குப் போக வேண்டும், இதுவரை சந்திக்காத மனிதர்களுடன் பழக வேண்டும்ஞ் என்று தன்னந்தனியாகவே சுதந்திரப் பறவையாக சுற்றித்திரியும் இளம் பெண் திவ்யா. அவர் தனது நண்பனுடன் இதுவரை பார்க்காத ஒரு இடத்திற்கு பயணம் செய்கிறார். அறிமுகமில்லாத இடம், அறிமுகமில்லாத மனிதர்கள், எதிர்பாராத ஒரு சம்பவம், அது எந்த இடம், அந்த சம்பவத்தில் என்ன நடந்தது என்பது தான், திவ்யாவின் கதை.

வழக்கமான பாணியில் இல்லாது, மிக வித்தியாசமான திரைக்கதையுடன் உருவாகியுள்ளது. படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் நடந்துகொண்டிருக்கிறது. என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !