பிரபல காமெடி நடிகர் வெங்கல் ராவ் மருத்துவமனையில் அனுமதி
ADDED : 1195 days ago
சினிமாவில் ஆரம்பத்தில் ஸ்டண்ட் நடிகராக வலம் வந்தவர் வெங்கல் ராவ். பிறகு காமெடி கலந்த குணச்சித்ர வேடங்களில் நடித்தார். குறிப்பாக வடிவேலுவின் காமெடி டீமில் ஒருவராக அறியப்பட்ட வெங்கல்ராவ், விஜயவாடா பக்கம் புனாதிபாடு கிராமத்தில் பிறந்தவர். வடிவேலுவுடன் தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ளார். தற்போது சுராஜ் இயக்கி வரும் 'நாய்சேகர் ரிட்டன்ஸ்' படத்தில் நடித்து வருகிறார் .
இந்நிலையில் சிறுநீரகக் கோளாறால் அவதிப்பட்டு வந்த வெங்கல்ராவ் திடீரென ஐதராபாத்தில் மருத்துவமனையில் ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். வெங்கல்ராவ் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என திரையுலகினர் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.