திருமண வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ராம் பொத்தினேனி
'தி வாரியர்' படம் மூலம் தமிழில் அறிமுகமாகும் தெலுங்கில் இளம் முன்னணி நாயகன் ராம் பொத்தினேனி பற்றி கடந்த சில நாட்களாக ஒரு செய்தி பரபரப்பாக வெளிவந்தது. அவருக்கும், அவருடன் படித்த பள்ளித் தோழி ஒருவருக்கும் விரைவில் திருமணம் என்பதுதான் அது.
அதை ராம் பொத்தினேனி மறுத்துள்ளார். “அடக் கடவுளே,,, நிறுத்துங்கள். “எந்த ஒரு ரகசிய பள்ளித் தோழியையும் நான் திருமணம் செய்து கொள்ளப் போவதில்லை” என, எனது குடும்பத்தினரையும், நண்பர்களையும் நான் நம்ப வைக்க வேண்டிய கட்டத்தை இது அடைந்துவிட்டது. உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், நான் எப்போதாவதுதான் உயர்நிலைப் பள்ளிக்குச் சென்றுள்ளேன்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
எந்த ஒரு காதல் வதந்தியும் முதலில் வரும் போது அது சம்பந்தப்பட்டவர்களால் மறுக்கப்படும். கொஞ்ச நாள் கழித்து அதுவே உண்மையாகிவிடும். இது பல சினிமா பிரபலங்களின் வாழ்க்கையில் நடந்த ஒன்று. ராம் பொத்தினேனி விஷயத்தில் எது நடக்கப் போகிறது என்பது சீக்கிரமே தெரிந்துவிடும்.