20 ஆண்டுகள் ; மாறாத மாதவன் - சிம்ரன் நெகிழ்ச்சி
ADDED : 1189 days ago
இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கையை தழுவி மாதவன் இயக்கி, நடித்துள்ள ‛ராக்கெட்ரி' படம் இன்று(ஜூலை 1) வெளியாகி உள்ளது. படத்திற்கு பாசிட்டிவ்வான விமர்சனங்கள் கிடைத்துள்ளன. இதில் அவரது மனைவியாக சிம்ரன் நடித்துள்ளார்.
மாதவன் உடன் எடுத்த போட்டோவை பகிர்ந்து சிம்ரன் கூறுகையில், ‛‛பார்த்தாலே பரவசம் படத்தில் சிமி, கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் இந்திரா, இப்போது ராக்கெட்ரியில் நம்பி நாராயணனின் மனைவி. எனக்கு மிகவும் பிடித்த கேரக்டர். 20 ஆண்டுகள் ஆகியும் மாதவன் மாறவேயில்லை. நீங்கள் தான் சிறந்தவர். உங்கள் இயக்கத்தில் பணியாற்றியது பெருமை உள்ளது'' என்றார்.