வின்னர் 2 உருவாகிறது
ADDED : 1189 days ago
சுந்தர் சி இயக்கத்தில் பிரசாந்த், கிரண், வடிவேலு கூட்டணியில் 2003ல் வெளியாகி வரவேற்பை பெற்ற படம் ‛வின்னர்'. இந்த படத்தின் காமெடி பெரிதும் பேசப்பட்டது. இப்போதும் டிவியில் இந்த படத்தின் காமெடியோ அல்லது படமே ஒளிப்பரப்பானாலும் ரசிகர்கள் பார்க்காமல் இருக்க மாட்டார்கள். அந்தளவுக்கு கைப்புள்ளயாக அசத்தியிருந்தார் வடிவேலு. இந்நிலையில் ஹிட் படங்களின் இரண்டாம் பாகம் உருவாகி வரும் வேளையில் வின்னர் 2 படமும் உருவாக உள்ளது. இந்த தகவலை நடிகர் பிரசாந்தே வெளியிட்டுள்ளார்.
திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயிலில் வழிபட்ட நடிகர் பிரசாந்த் செய்தியாளர்களிடம் பேசும்போது, ‛‛எனது ‛அந்தகன்' படம் விரைவில் வெளியாகிறது. அடுத்து ‛வின்னர் 2' உருவாகிறது. முதல்பாகத்தை விட இந்த படம் இன்னும் பிரம்மாண்டமாய் இருக்கும்'' என்றார்.