'உறியடி' விஜய்குமார் நடித்துள்ள புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவு
ADDED : 1213 days ago
'உறியடி' படத்தின் மூலம் நடிகர் மற்றும் இயக்குனராக அறிமுகம் ஆன விஜய்குமார் தற்போது அறிமுக இயக்குனர் அப்பாஸ் அ.ரஹமத் இயக்கி வரும் புதிய படத்தில் நடித்து வருகிறார். அந்தப் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவு பெற்றுள்ளது. ரீல் குட் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆதித்யா தயாரித்து வரும் இந்த ஆக்சன் படத்திற்கு இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இசைஅமைத்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக பட குழுவினர் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளனர்.