மேலும் செய்திகள்
நடிகை காஜல் அகர்வால் குறித்து தீயாய் பரவும் வதந்தி
1163 days ago
அமீர்கான் படத்தை கைவிட்டாரா லோகேஷ் கனகராஜ்
1163 days ago
தெலுங்குத் திரையுலகத்தின் முன்னணி நடிகரான மகேஷ் பாபு கடந்த சில வாரங்களாக தனது குடும்பத்தினருடன் வெளிநாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். தற்போதுதான் கமல்ஹாசன் நடித்துள்ள 'விக்ரம்' படத்தைப் பார்த்திருப்பார் போலிருக்கிறது. படம் பார்த்துவிட்டு பெரிதும் பாராட்டியுள்ளார்.
“விக்ரம், பிளாக்பஸ்டர் சினிமா. புதுயுகத்தின் கிளாசிக். லோகேஷ் கனகராஜ், உங்களை சந்தித்து இந்த 'விக்ரம்' படத்தின் மொத்த செயல்முறை என்ன என்பதைப் பற்றி விவாதிக்க வேண்டும். மனதை வளைக்கும் உணர்வு தரும் படம் பிரதர். விஜய் சேதுபதி, பகத் பாசில் ஆகியோரின் நடிப்பு மின்னுகிறது. இதை விட சிறப்பாக நடிக்க முடியாது. வாவ், அனிருத் என்ன ஒரு அற்புதமான இசை, இதுவரையில் வந்ததில் உங்களின் சிறப்பு. எனது பிளே லிஸ்ட்டில் நீண்ட காலம் டாப்பில் இருக்கப் போகிறது. கடைசியாக சாதனையாளர் கமல்ஹாசன். அவரது நடிப்பைப் பற்றி கமெண்ட் செய்ய எனக்குத் தகுதி இல்லை. உங்களது பெரிய ரசிகன், எனது பெருமையான தருணம் என்று மட்டும் என்னால் சொல்ல முடியும். உங்களுக்கும் உங்கள் அற்புதமான குழுவுக்கும் வாழ்த்துகள் சார்,” எனப் பாராட்டியுள்ளார்.
மகேஷ் பாபுவின் இந்த பாராட்டுக்கு அதிகமான லைக்குகள் கிடைத்துள்ளது. மகேஷ்பாபுவின் பதிவிற்கு பதிலளித்து லோகேஷ் கனகராஜ், 'உங்களை சீக்கிரம் சந்திக்க ஆசை சார், நன்றி,” என பதில் பதிவு செய்துள்ளார். மகேஷ்பாபுவின் பாராட்டுக்களுக்கு கமல்ஹாசன் இன்னும் எந்த நன்றியும் சொல்லவில்லை.
1163 days ago
1163 days ago