இயக்குனர் லீனா மீது முஸ்லிம் நடிகை கடும் தாக்கு
ADDED : 1286 days ago
இயக்குனர் லீனா மணிமேகலை செங்கடல், மாடத்தி படங்களை தொடர்ந்து காளி என்கிற ஆவணப் படத்தை இயக்கி நடித்துள்ளார். இந்த படத்தின் போஸ்டரை சமீபத்தில் லீனா வெளியிட்டார். அதில் ஹிந்துக்கள் வணங்கும் பெண் தெய்வமான காளி சிகரெட் பிடிப்பது போன்றும், ஓரினசேர்க்கையாளர்களின் கொடியை பிடித்திருப்பது போன்றும் சித்தரிக்கப்பட்டிருந்தது. இது ஹிந்துக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. லீனா மீது போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இதுகுறித்து ஹிந்தி மற்றும் பெங்காலி நடிகை நுஸ்ரத் ஜஹானிடம் இதுகுறித்து கேட்டபோது அதற்கு அவர், ‛மத உணர்வுகளை புண்படுத்துவதில் எனக்கு உடன்பாடு இல்லை. தனிப்பட்ட முறையில் நான் படைப்பாற்றலை எப்போதும் ஆதரிக்கிறேன். அதற்காக மத உணர்வுகளை புண்படுத்தக் கூடாது என்பதில் உறுதியாக உள்ளேன்' என்று கூறியுள்ளார்.