எனக்கு எப்போதோ திருமணமாகிவிட்டது - ஹன்சிகா
ADDED : 1180 days ago
ஹன்சிகாவின் 50வது படம் மஹா இம்மாத இறுதியில் வெளியாகிறது. அவர் அளித்த பேட்டி: ‛மஹா' படம் வெளியாவதில் சில காலம் தாமதமாகிவிட்டது. இனி அடுத்தடுத்து என் படங்கள் வெளியாகும். விரைவிலேயே 60வது படம் வெளியாகும். 105 மினிட்ஸ் படத்தில் நான் மட்டுமே நடித்துள்ளேன். ஒரே டேக்கில் எடுக்கப்பட்ட படம் இது. இதற்காக 20 நாட்களுக்கும் மேலாக ஒத்திகை நடந்தது. இது ஹாரர் த்ரில்லர் படம். ஒரு ஷாட் முடிவதற்குள், அடுத்த ஷாட்டுக்கு நானே ஓடிப்போய் அந்த காட்சிக்கு ஏற்ப தயாராக வேண்டும். நயன்தாராவுக்கு திருமணம் ஆகிவிட்டது அடுத்து உங்களுக்கு எப்போது என என்னிடம் கேட்கின்றனர். நான் எப்போதோ திருமணம் செய்து விட்டேன். அதாவது என் நடிப்பு தொழிலை திருமணம் செய்து விட்டேன். இப்போதைக்கு நடிப்பில் மட்டுமே என் கவனம். அதேபோல் அரசியல் எல்லாம் நமக்கு தேவையில்லாத ஒன்று.
இவ்வாறு அவர் கூறினார்.