சந்தானம் படத்தை வெளியிடும் உதயநிதி
ADDED : 1225 days ago
ரத்னகுமார் இயக்கத்தில் சந்தானம் நாயகனாக நடித்துள்ள புதிய படம் குலு குலு. இப்படம் ஜூலை 29ஆம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம் என மூன்று மொழிகளில் திரைக்கு வருகிறது. இப்படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிடுவதாக அதிரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வழக்கத்தை விட சந்தானத்தின் இந்த படம் அதிகப்படியான தியேட்டர்களில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. மேலும் உதயநிதி ஸ்டாலினும், சந்தானமும் ஒரு கல் ஒரு கண்ணாடி, நண்பேன்டா, இது கதிர்வேலன் காதல் போன்ற படங்களில் இணைந்து நடித்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.