நடிகை வரலட்சுமிக்கு கொரோனா - மாஸ்க் அணிய வலியுறுத்தல்
ADDED : 1188 days ago
நடிகர் சரத்குமாரின் வாரிசான வரலட்சுமி, ‛போடா போடி' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து, ‛விக்ரம் வேதா, தாரை தப்பட்டை, சர்கார் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். இப்போது தென்னிந்திய மொழிகளில் பிஸியாக நடித்து வருகிறார். இந்நிலையில் இவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட வீடியோ பதிவில், ‛‛எவ்வளவோ முன்னெச்சரிக்கையாக இருந்தபோதும் எனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. நடிகர்களாகிய நாம் படப்பிடிப்பின் போது முகக்கவசம் அணிய முடியாது. எனவே தயவு செய்து படப்பிடிப்பு தளத்தில் இருக்கும் படக்குழுவினர் அனைவரையும் முகக்கவசம் அணியுங்கள். சமீபத்தில் என்னுடன் தொடர்பில் இருந்தவர்களும் பரிசோதனை செய்துக் கொள்ளுங்கள். கவனமாக இருங்கள், கட்டாயம் அனைவரும் முக கவசம் அணியுங்கள்'' என்கிறார் வரலட்சுமி.