மாதவன் மகன் நீச்சல் போட்டியில் தேசிய சாதனை
                                ADDED :  1199 days ago     
                            
                             எல்லா முன்னணி நடிகர்களும் தங்கள் வாரிசை சினிமா நட்சத்திரமாக மாற்றிக் கொண்டிருக்கும்போது மாதவன் மட்டும் தன் மகனை தேசத்தக்கு பெருமை சேர்க்கும் விளையாட்டுத் துறையில் ஈடுபடுத்தி வருகிறார். அவரது மகன் வேதாந்த் நீச்சல் வீரராக வேகமாக வளர்ந்து வருகிறார். மகன் ஒலிம்பிக் போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக துபாயில் குடும்பத்தோடு தங்கி இருந்து வேதாந்துக்கு பயிற்சி அளித்து வருகிறார்.
இந்த நிலையில் வேதாந்த், தேசிய அளவிலான நீச்சல் போட்டியில் புதிய சாதனை படைத்துள்ளார். புவனேஸ்வரில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் நடந்த தேசிய நீச்சல் போட்டியில் 1500 மீட்டர் ப்ரீ ஸ்டைல் பிரிவில் கலந்துகொண்டு வேதாந்த் இந்த சாதனையை நிகழ்த்தி உள்ளார். முந்தைய சாதனையான 16:06:43 என்பதை 16:01:73  என்கிற அளவில் முறியடித்துள்ளார். இதனை மாதவன் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.