கொரோனாவை வரலட்சுமி எப்படி 'டீல்' செய்கிறார் தெரியுமா ?
ADDED : 1224 days ago
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாகவே கொரோனா தொற்று பரவி வருகிறது. அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள் சிலரும் கொரோனா தொற்றுக்கு ஆளாகி வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்வது, மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதுமாக இருக்கிறார்கள்.
தமிழ், தெலுங்கில் தொடர்ச்சியாக நடித்து வரும் நடிகை வரலட்சுமி சரத்குமாரும் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளார். வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ள வரலட்சுமி ஓய்வெடுக்காமல் தனது நாய்க்குட்டியுடன் ஜாலியாக கொரோனாவை எதிர் கொண்டுள்ளார்.
“கோவிட்டை நான் டீல் செய்யும் விதம். ஜஸ்ட் ஜாலியாக இருக்க முயற்சிக்கிறேன்” என அவரது கொரோனா கொண்டாட்ட வீடியோவைப் பதிவிட்டுள்ளார். அதற்கு சில சினிமா பிரபலங்களும் லைக் போட்டுள்ளார்கள். என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா ?.