உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / செல்வராகவன் நடித்துள்ள 'பகாசூரன்' படப்பிடிப்பு நிறைவு

செல்வராகவன் நடித்துள்ள 'பகாசூரன்' படப்பிடிப்பு நிறைவு

இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் உருவாகி வரும் பகாசூரன் படத்தில் செல்வராகவன் முன்னணிக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். நடிகர் நட்ராஜ் வில்லனாகவும், ராதாரவி முக்கிய கதாபாத்திரத்திலும் நடக்கிறார்கள் . இந்த படத்தை மோகன் ஜியின் ஜிஎம் பிலிம் கார்ப்ரேஷன் நிறுவனம் தயாரித்து வருகிறது. சி.எஸ். சாம் இசையமைத்து வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஏப்ரல் மாதம் சேலத்தில் தொடங்கியது. தற்போது படப்பிடிப்பு முழுவதுமாக நிறைவு பெற்றுள்ளதாக மோகன்ஜி தெரிவித்துள்ளார். சில தினங்களுக்கு முன்பு நடிகர் நட்டி நட்ராஜ் இந்தப் படத்தில் தனது பகுதிக்கான படப்பிடிப்பை நிறைவு செய்திருந்ததாகத் தெரிவித்திருந்தார். தற்போது படத்தின் ஒட்டு மொத்த படப்பிடிப்பும் நிறைவு பெற்றுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !