திருமண வதந்தியை மறுத்த நித்யா மேனன்
ADDED : 1284 days ago
தென்னிந்திய மொழிகளில் பல படங்களில் நடித்துள்ள நடிகை நித்யா மேனனுக்கும் ஒரு மலையாள நடிகருக்கும் திருமணம் நடைபெற்று விட்டதாக சில மீடியாக்களில் கடந்த சில தினங்களாக செய்திகள் வந்தன. அவற்றை நித்யா மேனன் மறுத்துள்ளார்.
மலையாள பத்திரிகை ஒன்றிற்கு அவர் அளித்துள்ள பேட்டியில், “சமூக வலைத்தளங்களில் பரவும் வதந்தியில் சிறிது கூட உண்மையில்லை. ஒரு செய்தியை வெளியிடும் போது அது பற்றி சம்பந்தப்பட்டவரிகளிடம் விசாரித்து உறுதி செய்து கொண்டு வெளியிட முயற்சிக்க வேண்டும்,” என அவர் தெரிவித்துள்ளார்.
நித்யா மேனன் தற்போது தமிழில் தனுஷ் நடிக்கும் 'திருச்சிற்றம்பலம்' படத்தில் நடித்துள்ளார். மலையாளத்தில் அவர் நடித்துள்ள '19 (1) ஏ' படம் விரைவில் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. இப்படத்தில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.