‛சந்திரமுகி 2' படப்பிடிப்பில் வடிவேலு செய்த ‛சுறா' காமெடி : வீடியோ வைரல்
ADDED : 1216 days ago
ரஜினிகாந்த் நடிப்பில் பி.வாசு இயக்கத்தில் கடந்த 2005ம் ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்த திரைப்படம் சந்திரமுகி. இதன் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. ரஜினிக்கு பதிலாக ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கிறார். லைகா நிறுவனம் தயாரிக்கிறது. பாகுபலி படத்தின் இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி இசையமைக்கிறார்.
வடிவேலு, நடிகை ராதிகா, ரவிமரியா ஆகியோரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சந்திரமுகி 2 படத்தின் படப்பிடிப்பு மைசூர் அரண்மனையில் தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படப்பிடிப்பு தளத்தில் சுறா படத்தில் செய்த தனது காமெடியை மீண்டும் செய்து காண்பித்துள்ளார் வடிவேலு. அதைப் பார்த்து ராதிகா, லாரன்ஸ் ஆகியோர் கலகலப்பாக சிரிக்கின்றனர். ராதிகா பகிர்ந்த இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.