உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சர்தார் : டப்பிங்கை துவக்கிய கார்த்தி

சர்தார் : டப்பிங்கை துவக்கிய கார்த்தி

பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி தற்போது 'சர்தார்' படத்தில் நடித்து வருகிறார். ராஷி கண்ணா மற்றும் ரெஜிஷா விஜயன் ஆகியோர் கார்த்தியுடன் இணைந்து நடிக்கின்றனர். ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். வித்யாசமான கதைக்களத்தில் உருவாகி வரும் இப்படத்தில் கார்த்தி இரட்டை வேடங்களில் நடிக்கிறார். தீபாவளிக்கு வெளியாகும் இந்தப் படத்தின் திரையரங்கு வெளியீட்டு உரிமைகளை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயின்ட் மூவிஸ் கைப்பற்றியுள்ளனர். இந்நிலையில் இப்படத்தில் தனது பகுதி படப்பிடிப்பை கார்த்தி முடித்துள்ளார். மேலும் தனக்கான டப்பிங்கையும் கார்த்தி தொடங்கியுள்ள வீடியோ வெளியாகியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !