இனி அது போன்ற விளம்பரங்களில் நடிக்க மாட்டேன் - லால் வருத்தம்
ADDED : 1211 days ago
மலையாள இயக்குனரும், நடிகருமான லால் தமிழில் ‛சண்டக்கோழி 2, எங்கள் அண்ணா, சுல்தான், கர்ணன்' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். ஆன் லைன் ரம்மி விளம்பரம் ஒன்றில் நடித்த இவர், தற்போது அதில் நடித்ததற்காக வருத்தம் தெரிவித்துள்ளார்.
லால் கூறுகையில், ‛‛கொரோனா காலக்கட்டத்தில் நிறைய பணக்கஷ்டத்தில் இருந்தேன். அப்போது இந்த விளம்பரத்தில் நடித்தேன். அரசும் இதற்கு அனுமதி அளித்ததால் நடித்தேன். ஆனால் தற்போது இதுபோன்ற சூதாட்டத்தால் நிறைய தற்கொலை உள்ளிட்ட சம்பவங்கள் நடப்பது வருத்தமளிக்கிறது. இதில் நடித்ததற்காக வருந்துகிறேன். இனி இதுபோன்ற விளம்பரங்களில் நடிக்க மாட்டேன்'' என்றார்.