தனுஷின் ஹாலிவுட் படம் ஓடிடியில் வெளியானது: ரசிகர்கள் ஏமாற்றம்
ADDED : 1222 days ago
தனுஷ் நடித்துள்ள ஹாலிவுட் படம் தி கிரே மேன். இதில் தனுசுடன் ரியான் கோஸ்லிங், கிறிஸ் எவன்ஸ், அனா டி அர்மாஸ், ஜெசிகா ஹென்விக், வாக்னர் மௌரா, பில்லி பாப், தோர்ன்டன், ஆல்ப்ரே வுடார்ட், ரெஜி-ஜீன் பேஜ், ஜூலியா பட்டர்ஸ், எமே இக்வுகோர், ஸ்காட் ஹேஸ் நடித்துள்ளனர்.
இந்த படம் தியேட்டரில் வெளிவரும், தனுஷின் ஹாலிவுட் படம் என்பதால் கொண்டாடலாம் என்று ரசிகர்கள் காத்திருந்தனர். இந்த நிலையில் படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இன்று வெளியாகி உள்ளது. இதற்கான நிகழ்ச்சி மும்பையில் நடந்தது. விக்கி கவுசல், ஜாக்குலின் பெர்னாண்டஸ், ராஜ் ஆம்ப், டி.கே ரன்தீப் ஹூடா, சித்தார்த் ராய் கபூர், விஷால் பரத்வாஜ், ஆனந்த் எல் ராய், பாபில் கான், விஹான் உள்ளிட்ட பாலிவுட் நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர்.