மீண்டும் ரோஷன் ஆண்ட்ரூஸ் - நிவின்பாலி கூட்டணி
ADDED : 1175 days ago
மலையாள திரையுலகில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் இயக்குனர் ரோஷன் ஆண்ட்ரூஸ். மலயாளத்தில் ஹவ் ஓல்டு ஆர் யூ படம் மூலமாக மஞ்சு வாரியருக்கும் தமிழில் 36 வயதினிலே படம் மூலமாக ஜோதிகாவுக்கும் வெற்றிகரமான ரீ-என்ட்ரி அமைத்து கொடுத்தவர். கடந்த சில மாதங்களுக்கு முன் துல்கர் சல்மானை வைத்து இவர் இயக்கிய சல்யூட் திரைப்படம் வெளியாகி டீசன்டான வெற்றியை பெற்றது.
இந்தநிலையில் அடுத்தததாக நிவின்பாலி நடிக்கும் படம் ஒன்றை இயக்க உள்ளார் ரோஷன் ஆண்ட்ரூஸ். படத்திற்கு சாட்டர்டே நைட்ஸ் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாம். இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என தெரிகிறது. கடந்த சில வருடங்களுக்கு முன் நிவின்பாலியை வைத்து காயம்குளம் கொச்சுண்ணி என்கிற பீரியட் படத்தை ரோஷன் ஆண்ட்ரூஸ் இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.