கோப்ரா பின்வாங்கினால் ஆகஸ்ட் 11ல் விருமனை வெளியிட முடிவு?
ADDED : 1180 days ago
அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் பல வேடங்களில் நடித்துள்ள படம் கோப்ரா. இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்திருக்கிறார். இப்படம் வருகிற ஆகஸ்ட் 11ம் தேதி திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் கடந்த சில தினங்களாக விக்ரமின் கோப்ரா படம் ஆகஸ்ட் 11ம் தேதி வெளியாகவில்லை. மாற்று தேதியில் வெளியாகும் என்று செய்திகள் வெளியாகி வருகின்றன. இதனால் முத்தையா இயக்கத்தில் கார்த்தி, அதிதி ஷங்கர் நடிப்பில் உருவாகியுள்ள விருமன் படத்தை ஆகஸ்ட் 31ம் தேதி வெளியிட்ட திட்டமிட்டுள்ள நிலையில், ஒருவேளை கோப்ரா பின்வாங்கினால் அப்படம் வெளியாக இருந்த ஆகஸ்ட் 11ம் தேதியில் விருமனை முன்கூட்டியே வெளியிட அப்படக்குழு தயாராகி வருவதாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது.