அதிக வருமான வரி: ரஜினிக்கு விருது
ADDED : 1180 days ago
சென்னை ஆழ்வார்ப்பேட்டை மியூசிக் அகாடமியில் வருமான வரி தினம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினர்களாக சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, தெலுங்கானா மற்றும் புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் தமிழகத்தில் அதிக வருமான வரி செலுத்திய நடிகர் ரஜினிகாந்துக்கு வருமான வரித்துறை சார்பில் விருது வழங்கப்பட்டது. இந்த விருதினை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் வழங்க, ரஜினிக்கு பதிலாக அவரது மகள் சவுந்தர்யா ரஜினிகாந்த் பெற்றுக்கொண்டார். அதிக வரி செலுத்திய விருது ரஜினிக்கு அளிக்கப்பட்டதை பாராட்டி அவரது ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர்.