மீண்டும் ஹீரோவாகும் பாண்டியராஜன்!
ADDED : 1180 days ago
தமிழ் சினிமாவில் இயக்குனர், நடிகர் என தனது கேரியரை தொடங்கியவர் பாண்டியராஜன். ஹீரோ வாய்ப்புகள் குறைந்த பிறகு கேரக்டர் நடிகராக தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் தற்போது ரியா என்றொரு அமானுஷ்ய படத்தில் கதாநாயகனாக மீண்டும் நடிக்க போகிறார் பாண்டியராஜன். இந்த படத்தில் அவருடன் முன்னாள் காமெடியன் செந்திலும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். கார்த்திக் சிவன் என்பவர் இப்படத்தை இயக்குகிறார். உண்மை சம்பவத்தை மையமாக கொண்ட கதையாக உருவாகும் இந்த ரியா படத்தில் தினம் தினம் அமானுஷ்ய சம்பவங்கள் நடக்கும் பேய் பங்களாவின் உரிமையாளராக பாண்டியராஜன் நடிக்கிறார்.