ஜி.வி பிரகாஷ் படம் மூலம் தமிழுக்கு வரும் ஹிருதயம் இசையமைப்பாளர்
ADDED : 1167 days ago
மலையாளத்தில் இந்த வருடம் மோகன்லாலின் மகன் பிரணவ் நடித்த ஹிருதயம் படம் வெளியானது. வினீத் சீனிவாசன் இயக்கத்தில் வெளியான இந்த படத்திற்கு ஹேசம் அப்துல் வகாப் என்பவர் இசையமைத்திருந்தார். இந்த படத்தின் மூலம் அறிமுகமான இவர் முதல் படத்திலேயே அற்புதமான பாடல்களால் கேரள ரசிகர்களை மட்டுமல்ல தென்னிந்திய திரையுலகிலும் பலரை கவர்ந்து விட்டார்.
ஏ.ஆர்.ரஹ்மானே ஒரு நிகழ்ச்சியில் இவரை சந்தித்தபோது உன்னுடைய பாடல் தான் எங்கும் ஒலிக்கிறது என்று பாராட்டியுள்ளார். இதன் எதிரொலிப்பாக, விஜய் தேவரகொண்டா, சமந்தா நடிப்பில் உருவாகி வரும் குஷி படத்தில் இசையமைப்பதன் மூலம் தெலுங்கு திரையுலகிலும் நுழைந்தார் ஹேசம் அப்துல் வகாப். இந்த நிலையில் தற்போது ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் படத்திற்கு இசையமைப்பதன் மூலம் தமிழிலும் இவர் அடியெடுத்து வைத்துள்ளார்.