அஜித் படமா - ஸ்ரீகணேஷ் பதில்
ADDED : 1162 days ago
‛8 தோட்டக்கள்' படம் மூலம் கவனம் ஈர்த்தவர் இயக்குனர் ஸ்ரீகணேஷ். தற்போது அதர்வாவை வைத்து குருதி ஆட்டம் என்ற படத்தை இயக்கி உள்ளார். நாளை இந்த படம் வெளியாகிறது. இந்நிலையில் இணையதளத்தில் ரசிகர்கள் உடன் கலந்துரையாடினார். அப்போது ரசிகர் ஒருவர் ‛‛நீங்கள் அஜித்துடன் படம் பண்ணுவதாக தகவல் வருகிறதே உண்மையா'' என கேட்டார். அதற்கு ஸ்ரீகணேஷ், ‛‛உங்கள் வார்த்தைக்கு நன்றி. இப்போது என்னால் எதுவும் கூற முடியாது. விரைவில் என் அடுத்த பட அறிவிப்பை சொல்கிறேன்'' என்றார்.