பிரபாகரன் வாழ்க்கை படத்தின் 2ம் பாகம் : 19ம் தேதி வெளியாகிறது
ADDED : 1256 days ago
விடுதலை புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் வாழ்க்கையை மையப்படுத்தி உருவான மேதகு என்ற படம் தியேட்டர்களில் வெளியானது. அதன் இரண்டாம் பாகம் வருகிற 19ம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாகிறது. முதல் பாகத்தில் பிரபாகரனின் 21 வயது வரையிலான வாழ்க்கை மட்டுமே சொல்லப்பட்டிருந்தது. இரண்டாம் பாகத்தில் அடுத்த 12 வருட காலகட்டத்தில் என்ன நடந்தது என்பது காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. பிரபாகரன் கதாபாத்திரத்தில் கவுரி சங்கர் நடித்துள்ளார். கவுரவத் தோற்றத்தில் நாசர் நடித்துள்ளார். இரா.கோ யோகேந்திரன் இயக்கியுள்ளார். பிரவின் குமார் இசை அமைத்துள்ளார், வினோத் ராஜேந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.