மாமனிதனுக்கு டோக்கியோவில் கவுரவம்
ADDED : 1157 days ago
விஜய் சேதுபதி நடிப்பில் சீனு ராமசாமியின் இயக்கத்தில் வெளியான படம் மாமனிதன். யுவன் சங்கர்ராஜா தயாரித்து, இசை அமைத்திருந்தார். இளையராஜாவும் உடன் இணைந்து இசை அமைத்திருந்தார் இந்த படம் கடந்த ஜூன் மாதம் வெளியாகி ரசிகர்களிடத்தில் கலவையான விமர்சனத்தை பெற்றது.
இந்த படத்திற்கு 'ஆசிய நாடுகளுக்கான சிறந்த படம்' என்ற விருது டோக்கியோ சர்வதேச திரைப்பட விழாவில் வழங்கப்பட்டிருக்கிறது. ஆசியாவின் சிறந்த படமாக 'மாமனிதன்' தேர்ந்தெடுக்கப்பட்டு, அதற்கு தங்க பதக்கம் வழங்கப்பட்டிருக்கிறது. பட குழுவினருக்கு தமிழ் திரையுலகினர் பாராட்டும் வாழ்த்தும் தெரிவித்து வருகிறார்கள். இதனை விஜய் சேதுபதி ரசிகர்களும் இணையத்தில் வைரலாக்கிக் கொண்டாடி வருகிறார்கள்.