உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கிளாமர் இமேஜ் மாறவேண்டும்: யாஷிகா விருப்பம்

கிளாமர் இமேஜ் மாறவேண்டும்: யாஷிகா விருப்பம்

எஸ் ஜே சூர்யா மற்றும் யாஷிகா ஆனந்த் நடிப்பில் இயக்குநர் வெங்கட் ராகவன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் கடமையை செய். வருகிற 12ம் தேதி திரைக்கு வரவுள்ள இப்படத்தின் அறிமுக நிகழ்ச்சியில் யாஷிகா ஆனந்த் கூறியதாவது: பல போராட்டங்களுக்கு பிறகு இந்த திரைப்படம் தியேட்டரில் வெளியாகிறது. முதன்முதலில் இந்த படக்கதையை என்னிடம் கூற வந்த போது என்னால் இந்த பாத்திரத்தை பண்ண முடியுமா? என பயந்தேன். ஆனால் செட்டில் இயக்குனர் என்னை சிறப்பாக நடிக்க வைத்தார்.

எனக்கு ஒரு கிளாமர் ஹீரோயின் என்ற அடையாளம் இருக்கிறது, அது இந்தப்படம் மூலம் மாறும். இந்த படத்தில் நான் பெரிய உழைப்பை கொடுத்துள்ளேன். இனிமேல் எனக்கு நிறைய நல்ல படங்கள் வருமென நம்புகிறேன். ஒளிப்பதிவாளர் உடைய ஒவ்வொரு பிரேமும் அழகாக இருக்கும். இந்த படம் ஒரு பேமிலி எண்டர்டெயினர் ஆக இருக்கும். என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !