நாங்க இருக்கிறோம், ஆதரவு கொடுக்கிறோம் : அஜித்தை பார்க்க செல்லும் திரைபிரபலங்கள்
கடந்த சில மாதங்களாக கார் ரேசில் ஆர்வம் காண்பிக்கிறார் அஜித். மலேசியா, இத்தாலி, துபாய் உள்ளிட்ட பல நாடுகளில் நடந்த கார் ரேசில் பங்கேற்றுவருகிறார். கார் ரேஸ் நடைபெறும் நாட்டுக்கு டூர் செல்லும் திரைபிரபலங்கள், அங்கே இருக்கும் சினிமா நட்சத்திரங்கள் அஜித்தை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இன்று நடந்த துபாய் கார்ரேஸ் சர்க்கியூட் சென்று அஜித்தை நேரில் சந்தித்து வாழ்த்தியுள்ளார் நயன்தாரா. அவருடன் விக்னேஷ் சிவனும் சென்றுள்ளார்.
அதேபோல் அஜித்தின் பல படங்களுக்கு இசையமைத்த ஜி.வி.பிரகாசும் துபாய் சென்று அஜித்தை பாராட்டி வாழ்த்தியுள்ளார். தீனா படத்தில் அஜித் தங்கையாக நடித்த திவ்யா, 25 ஆண்டுகளுக்குபின் அஜித் சந்தித்து பேசியுள்ளார். அந்த போட்டோ, வீடியோ வைரலாகி வருகிறது.
சில நாட்களுக்குமுன்பு நடிகர் சிபிராஜ் அஜித்தை ரேஸ் ஏரியாவில் சந்தித்துள்ளார். முன்பு இசையமைப்பாளர் அனிருத்தும், அஜித்தை நேரில் சந்தித்துள்ளார். இதற்கு முன்பு இயக்குனர்கள் சிறுத்தை சிவா, ஏ.எல்.விஜய், ஆதிக்ரவிச்சந்திரன் போன்றவர்களும் கார் ரேஸ் நடக்கும் இடத்துக்கே சென்று அஜித்துக்கு உற்சாக கொடுத்து பாராட்டியுள்ளனர்.
அதேபோல் ஆயிரக்கணக்கான ரசிகர்களும் கார் ரேஸ் நடக்கும் இடங்களுக்கு சென்று, அஜித்தை பார்த்து உற்சாக குரல் கொடுக்கிறார்கள். அவர்களுடன் அஜித்தும் போடடோ எடுத்து வருகிறார். சில ஆண்டுகளாக எந்த மீடியாவுக்கு பேட்டி கொடுக்காமல் இருந்த அஜித், கார் ரேஸ் நடக்கும் இந்த மாதங்களில் பல மீடியாவை சந்தித்து பேசியுள்ளார்.