ஆக., 31க்கு தள்ளிப்போன ‛கோப்ரா'
ADDED : 1152 days ago
அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம், ஸ்ரீநிதி ஷெட்டி, கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ‛கோப்ரா'. விக்ரம் ஏகப்பட்ட வேடங்களில் நடித்துள்ளார். அதிரடி ஆக் ஷன் படமாக உருவாகி உள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். கொரோனா பிரச்னையால் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வந்த படப்பிடிப்பு நிறைவடைந்து மற்ற பணிகள் நடந்து வந்தன. முன்னதாக இந்த படம் ஆக.,11ல் வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் திட்டமிட்டப்படி பணிகள் நிறைவடையாததால் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில் ஆக.,31ல் படம் வெளியாகும் என மறு அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். இந்த படத்தை தமிழகத்தில் உதயநிதியின் ரெட் ஜெயன்ட் பிலிம்ஸ் வெளியிடுகிறது.