ஜின்னா - தெலுங்கு படத்தில் சன்னி லியோன் : போஸ்டர் வெளியானது
ADDED : 1155 days ago
தமிழில் ஜெய் நடித்த வடகறி படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடிய சன்னி லியோன், அதன் பிறகு வடிவுடையான் இயக்கிய வீரமாதேவி என்ற படத்தில் நடித்தார். ஆனால் அந்த படம் பாதியில் நின்றது. அதையடுத்து ஓ மை கோஸ்ட் என்ற படத்தில் நடித்திருக்கிறார். அப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்நிலையில் தற்போது கன்னடத்தில் சாம்பியன் என்ற படத்தில் நடித்து வரும் சன்னி லியோன், தெலுங்கில் விஷ்ணு மஞ்சு நடிக்கும் ஜின்னா என்ற படத்தில் நடிப்பதற்கு கமிட்டாகி இருக்கிறார். இந்த படத்தில் ரேணுகா என்ற கேரக்டரில் அவர் நடிக்கிறார். அது குறித்த போஸ்டர் தற்போது வெளியிடபட்டுள்ளது. சூர்யா என்பவர் இயக்கும் இப்படம் தெலுங்கில் தயாரானபோதும் தமிழ், ஹிந்தி, மலையாளம் போன்ற மொழிகளிலும் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.