உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மீண்டும் ஐதராபாத்தில் அஜித் குமார்

மீண்டும் ஐதராபாத்தில் அஜித் குமார்

நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களை அடுத்து எச். வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் 61 வது படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கப்பட்டுள்ளது. அஜித்துக்கு ஜோடியாக மலையாள நடிகை மஞ்சு வாரியர் நடிக்கும் இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பில் கலந்து கொண்ட அஜித்குமார் அதன் பிறகு வெளிநாடுகளுக்கு பைக் பயணம் சென்று விட்டார். அதையடுத்து திருச்சியில் நடைபெற்ற துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்து கொண்டார். அப்போது அவரைக் காண ஏராளமான ரசிகர்கள் அங்கே கூடியதால் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் தற்போது மீண்டும் தனது 61 வது படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக ஐதராபாத் சென்றிருக்கிறார் அஜித்குமார். அங்கு ஒரு ஹோட்டலுக்கு சென்று உள்ளார். அவரை பார்த்ததும் அங்குள்ள ஹோட்டல் ஊழியர்கள் சூழ்ந்து கொண்டதை அடுத்து அவர்களுடன் நின்று போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ளார் அஜித். அது குறித்த புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !