விஜய் யேசுதாஸை இயக்கும் 10ம் வகுப்பு மாணவி
ADDED : 1154 days ago
பிரபல பின்னணி பாடகரான விஜய் யேசுதாஸ் மாரி படம் மூலம் நடிகராகவும் அறிமுகமானார். அதையடுத்து படைவீரன் படத்தில் கதாநாயகனாக நடித்தார். இந்நிலையில் 10 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி சின்மயி நாயர் இயக்குனராக அறிமுகமாகும் புதிய படத்தில் விஜய் யேசுதாஸ் கதாநாயகனாக நடிக்க உள்ளார். கிளாஸ் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்திற்கு அனில் ராஜ் வசனம் எழுதியுள்ளார், இதில் சுதீர் மற்றும் மீனாட்சி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர் . இந்தப் படத்தில் விஜய் யேசுதாஸ் கமாண்டோவாக நடிக்கிறார். சாபு குருவிலா மற்றும் பிரகாஷ் குருவிலா தயாரித்துள்ள இந்த படத்திற்கு பென்னி ஜோசப் ஒளிப்பதிவு செய்கிறார், மனு ஷாஜு படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். எஸ்.ஆர்.சுராஜ் இசையமைக்கிறார்.