நட்சத்திரம் நகர்கிறது படத்திற்கு ஏ சான்றிதழ்
ADDED : 1250 days ago
பா.ரஞ்சித் தயாரித்து, இயக்கி உள்ள படம் 'நட்சத்திரம் நகர்கிறது. காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், டான்சிங் ரோஸ் ஷபீர், கல்லரக்கல், கலையரசன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படம் வருகிற 31ம் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நவீன இளைஞர்களின் காதல் கதையாக இது உருவாகி இருப்பதாக கூறப்படுகிறது. படம் தணிக்கைக்கு சென்றபோது படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் படத்திற்கு சான்றிதழ் வழங்க மறுத்தாகவும் பா.ரஞ்சித் மறுதணிக்கைக்கு செல்வதாகவும் தகவல்கள் வெளியானது. படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் ஒரு சில கட்டுகளுடன் படத்திற்கு ஏ சான்றிழ் வழங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.