உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பெங்காலி மொழியில் வெளியாகும் கார்கி

பெங்காலி மொழியில் வெளியாகும் கார்கி

சாய்பல்லவி நடித்த 'கார்கி' படத்தை கவுதம் ராமச்சந்திரன் இயக்கியுள்ளார். முக்கிய வேடத்தில் காளி வெங்கட், சரவணன், ஐஸ்வர்யா லெஷ்மி ஆகியோர் நடித்துள்ளனர் கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். 2டி நிறுவனத்தின் மூலம் சூர்யா, ஜோதிகா வெளியிட்டனர். இந்த படம் தியேட்டர்களில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

பொதுவாக ஓடிடியில் வெளியாகும் தமிழ் படங்கள் தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் மொழிகளில் வெளியாகும், இந்தப் படம் பெங்காலி மொழியிலும் வெளியாகி உள்ளது. பாலியல் வழக்கில் சிக்கிய தந்தையை காப்பாற்ற போராடும் மகளின் கதை. படத்தில் வருவது போன்ற ஒரு சம்பவம் மேற்கு வங்கத்தில் நடந்திருப்பதால் இந்த படம் பெங்காலி மொழியிலும் வெளியிடப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !