அடுத்த ஹனிமூன் டிரிப்பா ; ரசிகர்கள் கேள்வி
ADDED : 1169 days ago
நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஜோடி கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் செய்து கொண்டனர். ஹனிமூனுக்காக தாய்லாந்து சென்றனர். அதன்பிறகு இருவரும் அவரவர் பணிகளில் பிஸியாக இருந்தனர். செஸ் ஒலிம்பியாட் வேலைகளை கச்சிதமாக முடித்த விக்னேஷ் சிவன் ஓய்விற்காக மனைவி நயன்தாராவுடன் ஸ்பெயின் நாட்டிற்கு கிளம்பி உள்ளார். விமானத்தில் பறந்தபடி ரொமான்ட்டிக்கான போட்டோவை பகிர்ந்துள்ளனர். ஸ்பெயினில் இருந்து திரும்பியதும் அஜித் பட வேலைகளில் இறங்க உள்ளார் விக்னேஷ் சிவன். நயன்தாரா ஹிந்தியில் தான் நடிக்கும் ஜவான் பட படப்பிடிப்பில் பங்கேற்க உள்ளார். விமானத்தில் இருக்கும் விக்கி - நயன் போட்டோவை பார்த்து நெட்டிசன்கள் என்ன அடுத்த ஹனிமூன் டூரா என கருத்து பதிவிட்டு வருகின்றனர்.