உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / லட்சுமி ராமகிருஷ்ணன் படத்திற்கு இளையராஜா இசை

லட்சுமி ராமகிருஷ்ணன் படத்திற்கு இளையராஜா இசை

நடிகையுமான, இயக்குனருமான லட்சுமி ராமகிருஷ்ணன் தற்போது ஒரு படத்தை இயக்கி வருகிறார். சமுத்திரக்கனி, அம்மு அபிராமி, மிஷ்கின், ரோபோ சங்கர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தின் படப்பிடிப்பின் இறுதிக்கட்ட பணிகள் நடக்கின்றன. இந்நிலையில் இந்த படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார்.

இளையராஜாவை சந்தித்த போட்டோவை பகிர்ந்து, ‛‛எங்களது படத்தில் இளையராஜா இணைந்ததை ஆசீர்வதிக்கப்பட்டதாக உணர்கிறோம். பின்னணி இசை பணிகள் நடக்கின்றன. அவருடன் பணிபுரிவது மிகப்பெரிய அனுபவமாக உள்ளது'' என தெரிவித்துள்ளார் லட்சுமி ராமகிருஷ்ணன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !