சமந்தாவின் ‛யசோதா' ரிலீஸ் எப்போது
ADDED : 1154 days ago
ஹரி - ஹரீஸ் இயக்கத்தில் சமந்தா முதன்மை வேடத்தில் நடித்துள்ள படம் ‛யசோதா'. இவருடன் வரலட்சுமி, உன்னி முகுந்தன் ஆகியோரும் நடித்துள்ளனர். உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து கிரைம் திரில்லர் படமாக உருவாகி உள்ளது. ஆக., 12ல் இந்த படம் ரிலீஸாவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் பட பணிகள் நிறைவடையாததால் இப்போது அடுத்த மாதம் செப்டம்பர், இரண்டாவது வாரத்தில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். இதுபற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது. தெலுங்கில் உருவாகி உள்ள இந்த படம் தமிழ் உள்ளிட்ட மொழிகளிலும் ரிலீஸாகிறது.